உத்தரப் பிரதேச மாநிலம் பாண்டா பகுதியில், சுமார் 34 சிறுவர்களைத் தங்களது வலைக்குள் வீழ்த்தி, பாலியல் வன்கொடுமை செய்து, அதனை ஆபாச இணையதளங்களுக்கு விற்று வந்த அரசு உதவிப் பொறியாளர் ராம்பவன் மற்றும் அவரது மனைவி துர்காவதி ஆகிய இருவருக்கும் நீதிமன்றம் மரண தண்டனை (தூக்குத் தண்டனை) விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
அரசு உதவிப் பொறியாளராகப் பணியாற்றி வந்த ராம்பவன் மற்றும் அவரது மனைவி துர்காவதி ஆகியோர், திட்டமிட்டு 8 முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களைத் தங்களது காமப் பசிக்கு இரையாக்கியுள்ளனர். தங்களது அக்கம் பக்கத்து வீட்டுச் சிறுவர்கள், தூரத்து உறவினர்கள், மற்றும் தங்களது சமூகத்தைச் சேர்ந்த ஏழை எளிய சிறுவர்களையே இவர்கள் குறிவைத்துள்ளனர்.
தங்களது வீடுகளில் வைத்து இக்கொடூரங்களை அரங்கேற்றியுள்ளனர். தனது தாத்தா-பாட்டி வீட்டில் தங்கிப் படித்து, தங்களது வீட்டிற்குப் பால் ஊற்ற வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 சகோதரர்கள இந்தத் தம்பதி தங்களது வலைக்குள் வீழ்த்திய கொடூரமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இவ்வழக்கின் விசாரணையின் போது பாதிக்கப்பட்ட சிறுவர்கள் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம் நெஞ்சை உலுக்கும் வகையில் இருந்தது. சிறுவர்கள் கூறியதாவது, “மடிக்கணினி (Laptop) கற்றுத் தருவதாகவும், கணினி விளையாட்டுகள் (Games) விளையாட அனுமதிப்பதாகவும் கூறி எங்களை வீட்டிற்குள் அழைப்பார்கள். அங்கு எங்கள் கண் முன்பாகவே கணவனும் மனைவியும் அநாகரிகமாக நடந்து கொள்வார்கள். பின்னர் ராம்பவன் எங்களைப் பலாத்காரம் செய்வார். ஒரு சிறுவனை 10 முதல் 12 முறையாவது பலாத்காரம் செய்திருப்பார். அவரது மனைவி துர்காவதியும் எங்களிடம் தவறாக நடப்பார். எங்களை எங்களுக்குள்ளேயே தவறான செயல்களில் ஈடுபடச் சொல்லி, அதை வீடியோ எடுப்பார்கள்.
இதற்கிடையில், சிறுவர்களான எங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டு காயம் அடைந்தால் ராம்பவனே மருந்துகளைப் போடுவார். துர்காவதி எங்களுக்கு நல்ல சாப்பாடுகளைச் செய்து கொடுப்பார். ராம்பவன் பணத்தைக் கொடுப்பார். பின்னர் யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவதாக எங்களை மிரட்டுவார்கள். இதனால் பயந்து போய் நாங்கள் யாரிடமும் கூறவில்லை” என்று சிறுவர்கள் அழுதுகொண்டே வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும், ராம்பவன் தான் வாடகைக்கு இருந்த வீட்டின் உரிமையாளரின் குழந்தையையும், தனது சொந்த அக்கா மகனையும் கூட விட்டுவைக்காமல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது விசாரணையில் உறுதியானது.
மிரட்டலுக்குப் பயந்த சிறுவர்களை வைத்தே, மேலும் பல ஏழை எளிய சிறுவர்களைத் தங்களது வீட்டிற்கு வரவழைத்து தங்களது காம சங்கிலியை இந்தத் தம்பதி நீட்டித்துக் கொண்டே சென்றுள்ளது. இவ்வாறு எடுக்கப்பட்ட ஆபாச வீடியோக்களை வெளிநாட்டு இணையதளங்களுக்கு விற்றுப் பணம் சம்பாதித்துள்ளனர்.
இவ்வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், சிறுவர்களுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதி மனிதநேயமற்றது மற்றும் மன்னிக்க முடியாதது என்று கூறி, குற்றம் சாட்டப்பட்ட உதவிப் பொறியாளர் ராம்பவன் மற்றும் அவரது மனைவி துர்காவதி ஆகிய இருவருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இச்சம்பவம் ஒட்டுமொத்த உத்தரப் பிரதேச மாநிலத்தையும் உலுக்கியுள்ளது.
