கோவையில் பெண் குழந்தை படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மௌனம் காப்பது வருத்தமளிப்பதாக பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது,
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) என்ற கட்சியைத் தொடங்கிய ஆரம்பக்காலத்தில், பரந்தூர் விமான நிலைய நில விவகாரப் பிரச்சினைக்காக நேரில் விரைந்து சென்று குரல் கொடுத்தவர் ஜோசப் விஜய். ஆனால், அவரே இன்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, கோவையில் அரங்கேறியுள்ள கொடூரமான பெண் குழந்தை படுகொலைச் சம்பவத்திற்கு எந்தவித எதிர்வினையும் ஆற்றாமல், அமைதி காத்து வருவது மிகுந்த வருத்தமளிக்கிறது.
பெண்களுக்கு எதிராகத் தொடர்ந்து நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளை முழுமையாக ஒழிக்க வேண்டும். இதுபோன்ற கொடூரப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்த, குற்றவாளிகளுக்கு நீதிமன்றங்கள் மூலம் கடுமையான தண்டனைகளைப் பெற்றுத் தர வேண்டும்.
அதேபோல, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கைச் சீர்குலைக்கும் மது விற்பனை மற்றும் போதைப்பொருள் புழக்கத்தை அறவே ஒழிக்க தமிழக அரசும், காவல்துறையும் இணைந்து போர்க்கால அடிப்படையில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதுமட்டுமே இந்த விவகாரத்திற்கு முறையான மற்றும் சரியான தீர்வாக அமையும். இவ்வாறு எச்.ராஜா தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
