சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் மீட்டிங்கில் நடந்த ஒரு சுவாரசியமான தவறு, விக்கெட் கீப்பர் இஷான் கிஷானை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கியதோடு, அதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் பயங்கர வைரலாகி வருகிறது.
அணியின் பயிற்சியாளர் ஜேம்ஸ் பிராங்க்ளின், ஒரு வீரரின் சிறந்த ஆட்டத்தைப் பாராட்டிப் பேசத் தொடங்கினார். அவர் “இஷான்…” என்று பெயரை உச்சரித்தவுடன், தன்னைத்தான் பாராட்டுகிறார் என்று நினைத்துக் கொண்டு இஷான் கிஷன் தனது இருக்கையிலிருந்து எழுந்தார்.
ஆனால், பயிற்சியாளர் இஷான் என்று குறிப்பிட்டது சக வீரரான ‘ஈஷான் மலிங்கா’வை என்பது அடுத்த சில நொடிகளில் தெரியவந்தது. ஒரே மாதிரியான பெயரால் ஏற்பட்ட இந்தச் சின்ன குழப்பமும், அதற்கு இஷான் கிஷன் கொடுத்த அப்பாவியான ரியாக்ஷனும் அங்கிருந்த வீரர்களிடையே பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
நடப்பு 2026 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற இஷான், ஈஷான் இருவருமே முக்கியக் காரணமாக இருந்துள்ளனர். இந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடி 569 ரன்கள் குவித்து, அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் இஷான் கிஷன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.
Ishan Kishan 😂 pic.twitter.com/F1W2qmx3Lu
— Out Of Context Cricket (@GemsOfCricket) May 24, 2026
“>
அதேபோல், இலங்கை வேகப்பந்து வீச்சாளரான ஈஷான் மலிங்காவும் இந்த சீசனில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் நீடிக்கிறார். இந்த ஒற்றுமைகளும், மீட்டிங்கில் நடந்த அந்த நகைச்சுவையான சம்பவமும் தற்போது சமூக வலைதளங்களில் மீம்ஸ்களாகப் பறந்து வருகின்றன.
