ஐபிஎல் 2026 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக தனது முதல் போட்டியில் களமிறங்கிய அர்ஜுன் டெண்டுல்கருக்கு, துரதிர்ஷ்டவசமாக அவரது முதல் விக்கெட் வாய்ப்பு நழுவிப் போயுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான சனிக்கிழமை போட்டியில் விளையாடிய அர்ஜுன், பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங்கிற்கு வீசிய துல்லியமான பவுன்சர் பந்து, பேட்ஸ்மேனின் கிளவுஸில் பட்டு விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கைகளுக்கு நேராகச் சென்றது.

​ஆனால், கச்சிதமாக வந்த அந்த கேட்ச் வாய்ப்பை ரிஷப் பண்ட் தவறவிட்டதால், அர்ஜுன் டெண்டுல்கர் தனது முதல் விக்கெட்டை எடுக்கும் பொன்னான வாய்ப்பை இழந்தார். இதனால் கடும் விரக்தியடைந்த அர்ஜுன், மைதானத்திலேயே துள்ளிக்குதித்து தலையில் கையை வைத்தபடி ஏமாற்றத்தை வெளிப்படுத்திய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது;

மேலும் இந்த விக்கெட் தப்பிய அடுத்த ஓவரிலேயே பிரப்சிம்ரன் சிங் மற்றும் ஸ்ரேயாஸ் ஆகியோர் அர்ஜுன் பந்துவீச்சில் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அவருக்கு கூடுதல் அதிர்ச்சியளித்தனர்.