சென்னையை சேர்ந்த செண்பகவள்ளி (68) என்ற மூதாட்டி, வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவருடைய மகன் துபாயிலும், மகள் திருவள்ளூரிலும் இருக்கும் நிலையில், தாயின் பாதுகாப்பிற்காக அவரது மகன் வீட்டில் கண்காணிப்பு சிசிடிவி கேமரா பொருத்தி, அதைத் தனது செல்போன் மூலம் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளார். இந்த நிலையில், துபாயில் இருந்து கேமரா காட்சிகளைப் பார்த்த மகன், வீட்டில் திடீரென புகைமூட்டமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக அருகில் இருந்தவர்களுக்குத் தகவல் கொடுத்து, அவர்கள் விரைந்து வந்து கதவை உடைத்துப் பார்த்தபோது, வீடு முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது. அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது, செண்பகவள்ளி உடல் முழுவதும் தீக்காயங்களுடன் மயங்கிக் கிடந்துள்ளார். பூஜை அறையில் அவர் கற்பூரம் ஏற்றியபோது, எதிர்பாராதவிதமாக அவரது சேலையில் தீப்பிடித்ததும், அதனால் ஏற்பட்ட கடுமையான புகையினால் அவர் மூச்சுத்திணறி மயங்கியதும் தெரியவந்தது.

உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள புழல் போலீசார், மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி