நெல்லை அருகே ஓடும் ரயிலில் பட்டதாரி பெண் ஒருவரின் கழுத்தை நெரித்து, அவரிடமிருந்த 3 சவரன் தங்க நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற துணிகர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அதிர்ச்சி சம்பவத்தில் ஈடுபட்ட நகையை பறித்த 14 வயது சிறுவன் மற்றும் அவனுக்கு உடந்தையாக இருந்த ஒரு இளம்பெண் ஆகிய இருவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

ஓடும் ரயிலில் பயணிகள் மத்தியில் அரங்கேறிய இந்த திக் திக் கொள்ளை சம்பவம் ரயில் பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.