கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் ஏசி மற்றும் கூலரின் உதவியோடு தங்களை உஷ்ணத்திலிருந்து பாதுகாத்துக் கொள்கின்றனர். ஆனால், மறுபுறம் ஏழைத் தொழிலாளர்கள் தங்களின் பசிப்பிணியைப் போக்குவதற்காக இந்தத் தகிக்கும் வெயிலிலும் உயிரைப் பணயம் வைத்து உழைத்து வருகின்றனர்.
வறுமையின் கொடூரமான நிஜத்தை விளக்கும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு வீட்டின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், கொளுத்தும் வெயிலில் சிமெண்ட் மற்றும் ஜல்லிக்கற்களைச் சுமந்து கடினமாக உழைப்பதைக் காண முதிகிறது.
வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல், தங்களின் உடலைக் குளிர்விப்பதற்காக சக தொழிலாளி ஒருவர் பைப் மூலம் தண்ணீர் ஊற்ற, அந்த ஈரத்துணியோடு அவர்கள் தொடர்ந்து வேலை செய்யும் காட்சி பார்ப்பவர் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது.
இந்த உருக்கமான வீடியோ இணையத்தில் லட்சக்கணக்கானோரை உருக வைத்துள்ளதுடன், பலரையும் உணர்ச்சிவசப்படவும் வைத்துள்ளது. ‘@ChapraZila’ என்ற எக்ஸ் (X) தள பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களின் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
“ஏசி அறையில் அமர்ந்துகொண்டு வெயிலைக் குறை கூறும் மக்கள், இந்தத் தார்ச் சாலையிலும் தகிக்கும் வெயிலிலும் உழைக்கும் கைகளைப் பார்க்க வேண்டும்” என்று ஒரு பயனர் பதிவிட்டுள்ளார்.
इस भयानक गर्मी में जब लोग छतों के नीचे भी परेशान हैं, तब कोई अपनों के सुनहरे भविष्य के लिए जलती धूप में पसीना बहा रहा है। निशब्द! 🥺❤️ pic.twitter.com/OjgpFqDx4F
— छपरा जिला 🇮🇳 (@ChapraZila) May 21, 2026
“>
“குடும்பப் பொறுப்பு மனிதனை எந்தக் காலநிலையோடும் சண்டையிடக் கற்றுக்கொடுக்கும்” என்றும், “வயிற்றுப் பசி பெரிதாக இருக்கும்போது வெயில் கூடத் தோற்றுப்போகும்” என்றும் தொழிலாளர்களின் இந்த வாழ்வாதாரப் போராட்டத்தைக் கண்டு இணையவாசிகள் நெகிழ்ச்சியுடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.
