திரையரங்குகளில் படம் பார்க்கும்போது ரசிகர்கள் சிலர் சாமி ஆடி கொண்டாடிய விவகாரம் சோசியல் மீடியாவில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், அதற்கு நடிகர் மற்றும் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி அதிரடி விளக்கம் அளித்துள்ளார்.

திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தியேட்டர்களில் சாமி ஆடுவதற்காக தயாரிப்பு நிறுவனமே காசு கொடுத்து ஆட்களை அனுப்பி வைத்துள்ளதாகச் சிலர் தேவையில்லாமல் வதந்திகளைப் பரப்பி வருவதாகக் குறிப்பிட்டார்.

தங்களால் அவ்வளவு பெரிய பட்ஜெட்டைச் செலவு செய்து ஆட்களைத் தியேட்டருக்கு அனுப்ப முடியாது என்றும், அப்படிச் செய்தால் அது படத்தின் ஒட்டுமொத்த பட்ஜெட்டை விட அதிகமாகிவிடும் என்றும் தனது பாணியில் நகைச்சுவையாகப் பதிலடி தந்துள்ளார்.

மேலும், மக்கள் இந்தத் திரைப்படத்தைத் தங்களுடைய சொந்தப் படமாக நினைத்து மனதாரக் கொண்டாடுவதுதான், இந்தப் படத்திற்குக் கிடைத்துள்ள மிக ஸ்பெஷலான விஷயம் என்றும் அவர் நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.