பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ், மாம்பழம் சாப்பிடுவது குறித்து தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு குறும்புத்தனமான வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

அந்த வீடியோவில், ‘இமாம் பசந்த்’ ரக மாம்பழத்தை ஐஸ்கிரீமுடன் சேர்த்துச் சாப்பிடும் பிரகாஷ் ராஜ், “பாருங்கள் மோடிஜி, மாம்பழத்தை இப்படி முழுமையாக வெட்டி, அதனுடன் ஐஸ்கிரீம் சேர்த்து கரப்பான்பூச்சிகள் இப்படித்தான் சாப்பிடும்” என்று பேசியுள்ளார்.

மேலும், அந்த வீடியோவிற்கு “கரப்பான்பூச்சி மாம்பழம் சாப்பிடுகிறது.. யம்மி” என்றும் அவர் தலைப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை நெட்டிசன்கள் பலரும், கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடிக்கும் நடிகர் அக்சய் குமாருக்கும் இடையே நடந்த புகழ்பெற்ற மாம்பழ நேர்காணலுடன் ஒப்பிட்டு, இது ஒரு அரசியல் ரீதியான கிண்டல் என சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலவிதமான கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். ஒரு பயனர், “மாம்பழத்தை வெட்டிச் சாப்பிடுகிறீர்களா அல்லது பிழிந்துச் சாப்பிடுகிறீர்களா என்ற கேள்விக்கு நீங்கள் எப்படிப் பதில் சொல்வீர்கள்? நீங்கள் ஏமாற்றுகிறீர்கள்” என்று 2019 நேர்காணலைக் குறிப்பிட்டு விளையாட்டாகக் கேட்டுள்ளார்.

மற்றொரு பயனரோ, “கரப்பான்பூச்சிகள் ஸ்பூனால் மாம்பழம் சாப்பிடாது; அவை சாக்கடைகளிலும் குப்பைகளிலும் வாழும் பூச்சிகள்” என்று பிரகாஷ் ராஜை சாடி நீளமாகப் பதிவிட்டுள்ளார்.

“>

 

அதேநேரம், “பூச்சிகள் கூட இப்போது நல்ல நாட்களை அனுபவிக்கத் தொடங்கிவிட்டன” என்றும், “கரப்பான்பூச்சி தாமரையைச் சாப்பிடுகிறது” என்றும் பலர் நகைச்சுவையாகவும் தங்களின் அரசியல் கருத்துக்களை இந்த வீடியோவின் கீழ் பதிவிட்டு வருகின்றனர்.