பெங்களூருவைச் சேர்ந்த குடல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பரமேஸ்வரன், பெரும்பாலான இந்தியர்கள் பின்பற்றும் தவறான உணவு மற்றும் தூக்க முறைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரித்துள்ளார். குறிப்பாக, இரவு 9 மணிக்கு மேல் சாப்பிடுவது உணவை செரிமானத்திற்குப் பதிலாக நொதிக்கச் செய்து, வாய்வுத் தொல்லை மற்றும் அமிலத்தன்மையை உருவாக்குகிறது.

மேலும், உண்பதற்கு முறையான கால அட்டவணை இல்லாதது, பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது, போதிய அளவு தண்ணீர் குடிக்காதது, நார்ச்சத்து மிகுந்த உணவுகளைத் தவிர்ப்பது மற்றும் முறையற்ற தூக்கம் ஆகிய 6 பழக்கங்கள் நம் குடலின் ஆரோக்கியத்தை கடுமையாகப் பாதிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Dr Parameshwara CM (@parameshwaracm)

“>

இந்தக் குடல் ஆரோக்கியச் சிதைவுகளைத் தவிர்க்க, ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்களை நாம் மேற்கொள்ள வேண்டும். உணவை சரியான நேரத்தில் உண்பது, பதப்படுத்தப்பட்ட உணவுகளைக் குறைத்து நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சேர்ப்பது, போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மற்றும் ஆழ்ந்த உறக்கத்தைப் பின்பற்றுவது அவசியம்.