தெலங்கானா மாநிலம் சித்திப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அக்பர்பேட் பூம்பள்ளி மண்டலப் பகுதியில், சீல் வைக்கப்பட்ட பிரபல நிறுவனத்தின் பீர் பாட்டிலுக்குள் காலி ஆணுறை பாக்கெட் ஒன்று மிதந்த அதிர்ச்சிச் சம்பவம் ஒட்டுமொத்த மதுபானப் பிரியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் ஒயின் கடையில் பீர் பாட்டில் ஒன்றை வாங்கி வீட்டிற்குச் சென்று குடிக்க முயன்றபோது, பாட்டிலுக்குள் ஆணுறை பாக்கெட் மிதப்பதைக் கண்டு உறைந்துபோய் உடனடியாகக் கடை மேலாளரிடம் புகார் அளித்துள்ளார்.

பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் முன்னணி பிராண்டட் நிறுவனங்கள், பாட்டில்களில் மதுவை அடைக்கும்போது குறைந்தபட்ச சுகாதாரத்தைக் கூடப் பராமரிக்காமல் நுகர்வோரின் உயிருடன் விளையாடுவதாகப் பொதுமக்கள் கடும் சீற்றம் அடைந்துள்ளனர்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வரும் நிலையில், கலால் துறை அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டுச் சம்பந்தப்பட்ட மதுபான உற்பத்தி ஆலையின் மீது கடுமையான சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.