தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெய், அண்மையில் நடந்த தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ததோடு, விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற விழாவிலும் மேடையில் பங்கேற்றார்.
இதற்கிடையே, அவர் நடித்த ‘சட்டென்று மாறுது வானிலை’ திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான நிலையில், மற்றொரு படமான ‘கருப்பு’ நல்ல வரவேற்பைப் பெற்று வருவதால் ஜெய்யின் படத்திற்குத் திரையரங்குகளில் குறைந்த காட்சிகளே கிடைத்துள்ளன.
இந்தச் சூழ்நிலையில், பல ஆண்டுகளுக்கு முன்பே இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறியதற்கான உண்மையான காரணம் குறித்து நடிகர் ஜெய் தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் ஓப்பனாகப் பகிர்ந்துள்ளார்.
நான் முன்பு சபரிமலைக்கு மாலை போட்டுள்ளதாகவும், இயேசுவை வழிபட்டு ஒரு வருடம் விரதம் இருந்ததாகவும் கூறியுள்ள ஜெய், அனைத்துக் கடவுள்களையும் தாம் மதிப்பதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், சில கோவில்களில் தாம் தொடர்ந்து பல அவமானங்களைச் சந்தித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு மாறாக, இஸ்லாமிய மசூதிக்குச் சென்றபோது அங்குத் தன்னை யாரும் ஒரு பிரபலமாகப் பார்க்கவில்லை என்றும், மசூதிக்குள் தன்னிடம் பேசுவதைக் கூடத் தவிர்த்துவிட்டு கடவுளை மட்டுமே பிரதானமாக நினைத்தார்கள் என்றும் கூறியுள்ளார்.
சாமி கும்பிடும்போது பிடித்துத் தள்ளுவதோ, கிளம்பச் சொல்வதோ இல்லாமல் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அங்குத் தொழுகை செய்ய முடிகிறது என்றும், தனுடன் புகைப்படம் எடுக்கக் கூட யாரும் தொந்தரவு செய்யவில்லை என்றும் குறிப்பிட்ட ஜெய், இந்த அமைதியும் மரியாதையும்தான் தன்னை இஸ்லாம் மதத்திற்கு மாறத் தூண்டியது என்று உருக்கமாக விளக்கியுள்ளார்.
