தமிழக விவசாயிகளின் நலனைக் காக்கும் பொருட்டு, மாநிலத்திற்குத் தேவையான உரங்களைத் தங்குதடையின்றி வழங்கக் கோரி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடியாகக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
தமிழகத்தில் சுமார் 40 சதவீதத்திற்கும் அதிகமான பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் விவசாயத்தையே தங்களது முதன்மை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வருவதாக அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் விஜய், வரவிருக்கும் சாகுபடி காலத்திற்குத் தேவையான யூரியா மற்றும் டிஏபி (DAP) போன்ற அத்தியாவசிய உரங்களின் தேவை வரும் நாட்களில் மிகக் கடுமையாக அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, தமிழக விவசாயப் பெருமக்களுக்கு எவ்வித உரத் தட்டுப்பாடும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதை அரசுக்கு நினைவூட்டியுள்ள அவர், மத்திய அரசு உரியக் காலத்திற்குள் தேவையான உரங்களை முழுமையாகத் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அந்த அதிகாரப்பூர்வ கடிதத்தின் மூலம் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.
