சென்னை மாநகராட்சியில் பிறப்புச் சான்றிதழைப் பெறுவதற்காக மக்கள் இனி அலைந்து திரியத் தேவையில்லை என்றும், குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ் நேரடியாகப் பெற்றோரின் வாட்ஸ்ஆப் எண்ணிற்கே அனுப்பப்படும் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் ஐஏஎஸ் அதிரடியான மெகா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த அதிரடித் திட்டத்தின்படி, பொதுமக்கள் சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்ஆப் எண்ணான 94450 61913 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு, பிரசவத்தின் போது மருத்துவமனையில் அளித்த தங்களின் செல்போன் எண்ணைப் பதிவு செய்வதன் மூலம், எவ்வித அலைச்சலுமின்றி வீட்டில் இருந்தபடியே தங்களது குழந்தையின் பிறப்புச் சான்றிதழை மின்னல் வேகத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
விஜய் அரசு பொறுப்பேற்று சென்னை மாநகராட்சிக்கு புதிய கமிஷனராக சமீரன் நியமிக்கப்பட்ட சில நாட்களிலேயே, மக்கள் பயன்பாட்டிற்காகக் கொண்டு வரப்பட்டுள்ள இந்த டிஜிட்டல் புரட்சி திட்டம் இல்லத்தரசிகள் மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் மத்தியில் மிகப்பெரிய நிம்மதியையும், பாராட்டுகளையும் குவித்து வருகிறது.
