குழந்தைகளின் முதல் நண்பர்களே அவர்களின் தாத்தா-பாட்டிதான் என்பதற்குச் சான்றாக ஒரு நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி பலரது கண்களைக் குளமாக்கியுள்ளது.

அந்த வீடியோவில், தனது தாத்தா ஊருக்குச் செல்வதை அறிந்த சிறுமி ஒருத்தி, மிகுந்த சோகத்துடன் “நாளைக்கு எங்க தாத்தா போயிடுவாரு..

 

View this post on Instagram

 

A post shared by Times Now (@timesnow)

எனக்கு ரொம்ப அழுகையா வருது” என்று மழலை மாறாமல் கூறுகிறாள். அதற்கு அவளுடைய தாத்தாவும் கண்கள் கலங்க, “ஆமாம்மா.. நான் உன்னை விட்டுட்டு நாளைக்கு ஊருக்குப் போயிடுவேன்” என்று கூறுகிறார்.

உடனே அந்தச் சிறுமி, “நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவேன் தாத்தா.. உங்களை விட எனக்குத்தான் உங்க ஞாபகம் அதிகமா வரும்” எனப் போட்டியிட்டுப் பாசத்தைப் பொழிகிறாள்.

சில நிமிடங்கள் மட்டுமே ஓடும் இந்த வீடியோ, தாத்தா-பேத்தி இடையிலான உன்னதமான பிணைப்பை மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளது.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், “எனக்கும் என் தாத்தா ஞாபகம் வந்துவிட்டது.. முதியவர்களுடன் நாம் அதிக நேரம் செலவிட வேண்டும்” எனத் தங்களது கருத்துக்களை உருக்கமாகப் பகிர்ந்து வருகின்றனர்.