குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஒரு இளைஞனைத் திருத்த, அவனது நண்பர்களும் குடும்பத்தினரும் சேர்ந்து அரங்கேற்றிய ‘மரண’ பிராங்க் வீடியோ இப்போது இணையத்தில் அதிரடி வைரலாகி வருகிறது. அவன் போதையில் மயங்கிக் கிடந்தபோது, அவனை ஒரு சவப்பெட்டிக்குள் கிடத்தி, அந்தச் சவப்பெட்டியை ஒரு மேடை மீது வைத்துவிட்டனர். கீழே நண்பர்களும், உறவினர்களும் மிகுந்த சோகத்துடன் அமர்ந்திருக்க, சிலர் அழுது கொண்டும் இருந்தனர். போதை தெளிந்து சவப்பெட்டிக்குள் இருந்து கண் விழித்த அந்த இளைஞன், தான் இறந்துவிட்டதாக நம்பி மெல்ல கீழே இறங்கி வருகிறான்.
Friends staged a funeral prank for a heavy drinker, he bought it until his dad snapped him awake with a slap 👋 pic.twitter.com/FjdCr5dLFx
— Tansu Yegen (@TansuYegen) May 14, 2026
கீழே சோகமாக அமர்ந்திருந்த தனது தாயின் அருகில் சென்று, பயத்துடன் “அம்மா…” என்று அவர் தோளைத் தொட்டு அழைக்கிறான். அந்த உருக்கமான தருணத்தில், பக்கத்தில் அமர்ந்திருந்த அவனது தந்தை, எந்த ஒரு வார்த்தையும் பேசாமல் சட்டென்று எழுந்து மகனின் கன்னத்தில் ‘பளார்’ என்று ஒரு அறை விட்டார். அந்த அடி விழுந்த அடுத்த நொடியே அழுது கொண்டிருந்த அனைவரும் கைதட்டிச் சிரிக்கத் தொடங்கினர். அப்போதுதான் அது தன்னைத் திருத்துவதற்காகச் செய்யப்பட்ட பிராங்க் என்பதை உணர்ந்த அந்த இளைஞன், நிம்மதிப் பெருமூச்சு விட்டான். இந்த வீடியோ தற்போது எக்ஸ் (X) தளத்தில் பலரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து வருகிறது.
