மகாராஷ்டிர மாநிலம் புல்டாணா மாவட்டத்தில், தனது சொந்த மகளையே தந்தை தலைதுண்டித்துக் கொலை செய்த கொடூரமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான ஆறே நாட்களில் புகுந்த வீட்டிலிருந்து பிறந்த வீட்டிற்குத் திரும்பிய அந்த இளம்பெண், தனது உறவினர் ஒருவருடன் தகாத உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த தந்தை, குடும்ப கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் தனது மகளை மூங்கில் தடியால் தாக்கி கொலை செய்துள்ளார். இக்கொலைச் சம்பவத்திற்குப் பிறகு, ஆதாரங்களை மறைப்பதற்காக தந்தை தனது மகனின் உதவியுடன் இளம்பெண்ணின் உடலைத் துண்டு துண்டாக வெட்டி, தலையைத் தனியாகத் துண்டித்துள்ளார்.

மேலும் பின்னர் உடலின் சில பாகங்களை எரிக்க முயன்று, வனப்பகுதியில் வீசிச் சென்றுள்ளனர். காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், காணாமல் போனதாகத் புகார் அளிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் மரணத்தின் பின்னணியில் இருந்த தந்தையும் சகோதரனும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.