பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் பணி கலாச்சாரத்திற்கு இடையே உள்ள மிகப்பெரிய வேறுபாடுகளைப் பகிர்ந்துள்ளார். அவர் தனது சமூக வலைதளப் பதிவில், அமெரிக்காவில் பெரும்பாலான அலுவலகங்கள் மாலை 4:30 மணிக்கே காலியாகிவிடுவதாகவும், ஊழியர்கள் தங்களது தனிப்பட்ட நேரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இந்தியாவில் இரவு 10 மணி வரை நீளும் தொடர் கூட்டங்கள் மற்றும் பணிச்சுமை காரணமாக ஊழியர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுவதாக அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அமெரிக்காவில் பணி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை சமநிலை சிறப்பாகப் பேணப்படுவதையும், இந்தியாவில் நிலவும் ‘உழைப்பு கலாச்சாரம்’ ஊழியர்களை எவ்வாறு மனரீதியாகச் சோர்வடையச் செய்கிறது என்பதையும் இந்த ஒப்பீடு சுட்டிக்காட்டுகிறது.
இந்நிலையில் இந்திய நிறுவனங்களில் நிலவும் இந்த நீண்ட நேர வேலைப்பளு குறித்து இணையதளங்களில் பெரும் விவாதமே எழுந்துள்ளது. ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்தியாவிலும் பணி நேரக் கட்டுப்பாடுகளை முறையாக அமல்படுத்த வேண்டியது அவசியம் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.
