தமிழகத்தில் கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்று அதிரடி வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது நகைப்பிரியர்களுக்குப் பெரும் ஆறுதலைத் தந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து அதிர்ச்சி கொடுத்த நிலையில், இன்று (மே 15) தங்கம் விலை தடாலடியாகக் குறைந்துள்ளது. அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.14,950-க்கும், சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,19,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று பலத்த சரிவைக் கண்டுள்ளது; ஒரு கிராம் வெள்ளி ரூ.10 குறைந்து ரூ.305-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.10,000 என்கிற மெகா சரிவுடன் ரூ.3,05,000-க்கும் விற்பனையாகிறது. இந்தத் திடீர் விலை சரிவு, சுப நிகழ்ச்சிகளுக்காக நகை வாங்கத் திட்டமிட்டிருப்பவர்களுக்கு ஜாக்பாட் செய்தியாக அமைந்துள்ளது.
