பாகிஸ்தானின் கராச்சி மற்றும் நூர் கான் விமான தளங்களில் ஈரானின் போயிங் 747 மற்றும் RC-130H போர் விமானங்கள் தரையிறக்கப்பட்ட விவகாரம் சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கடந்த ஏப்ரல் மாதம் தரையிறங்கிய ஈரானிய போர் விமானம், ஒரு மாதத்திற்கும் மேலாக பாகிஸ்தானிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர் டேமியன் சைமன் செயற்கைக்கோள் ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளார்.
தெஹ்ரான் மற்றும் வாஷிங்டன் இடையே அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈரான் தூதுவராகச் செயல்பட்டு வரும் வேளையில், இந்த ரகசிய விமான நகர்வுகள் சந்தேகத்தை கிளப்பியுள்ளன.
இது குறித்து அமெரிக்க செனட் அதிகாரி கிரஹாம், பாகிஸ்தானின் இத்தகைய நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க பாதுகாப்பு செயலகம் மிகவும் “எச்சரிக்கையாக” இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஈரான் – பாகிஸ்தான் இடையிலான இந்த நெருக்கமான ராணுவ உறவு ஆசிய பிராந்தியத்தில் புதிய அரசியல் மாற்றங்களுக்கு வழிவகுக்கலாம் என்று கருதப்படுகிறது.
