இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை ஒன்றிய அரசு 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக அதிரடியாக உயர்த்தியுள்ளது. நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை பாதுகாக்கவும், ரூபாய் மதிப்பின் சரிவைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. முன்னதாக, நாட்டின் பொருளாதார நலன் கருதி கிரிக்கெட் ரசிகர்கள் முதல் சாமானிய மக்கள் வரை அனைவரும் ஒரு ஆண்டுக்குத் தங்கம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது வரி 15 சதவீதமாக உயர்த்தப்பட்டிருப்பது தங்கம் மற்றும் வெள்ளி விலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 10% அடிப்படை வரி மற்றும் 5% கூடுதல் வரி (AIDC) என மொத்தம் 15% வரி விதிக்கப்பட்டுள்ளதால், நகை வாங்கத் திட்டமிட்டிருப்பவர்கள் பெரும் கவலையடைந்துள்ளனர். கடத்தலைத் தடுக்கவும், இறக்குமதியைக் குறைக்கவும் அரசு எடுத்துள்ள இந்த அதிரடி முடிவு, வரும் நாட்களில் நகை சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
