தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய், இதுவரை தமிழக அரசியல்வாதிகள் பின்பற்றி வந்த வேட்டி-சட்டை பாரம்பரியத்தை உடைத்து, கருப்பு நிற கோட்-சூட்டில் சட்டசபைக்குள் நுழைந்து பெரும் கவனத்தை ஈர்த்துள்ளார். ‘பீஸ்ட்’ படத்தில் அவர் நடித்த கதாபாத்திரத்தின் தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு, ஆடை வடிவமைப்பாளர் சபிர் அகமது இந்த உடையை உருவாக்கியுள்ளார்.

கருப்பு என்பது அதிகாரம் மற்றும் ஆளுமையின் அடையாளம் என்பதால், விஜய் இந்த நிறத்தை விரும்பித் தேர்வு செய்ததாகக் கூறப்படுகிறது. விஜய்யின் இந்த நவீனத் தோற்றம் ஒருபுறம் பாராட்டுகளைப் பெற்றாலும், மறுபுறம் பாரம்பரிய உடையைப் புறக்கணிப்பதாகச் சில விமர்சனங்களும் எழுந்துள்ளன. ​பதவியேற்ற கையோடு, முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் வைகோ, அன்புமணி உள்ளிட்ட மூத்த தலைவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று விஜய் ஆசி பெற்றது அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

அதுமட்டுமின்றி, ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடனேயே பள்ளி, கல்லூரிகள் மற்றும் கோவில்களுக்கு அருகில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட உத்தரவிட்டுத் தனது முதல் அதிரடியைத் தொடங்கியுள்ளார். விஜய்யின் இந்த அதிரடி நடவடிக்கையை கமல்ஹாசன், பிரேமலதா போன்ற அரசியல் தலைவர்கள் பாராட்டி வரும் நிலையில், அடுத்த சில தினங்களில் சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க விஜய் தயாராகி வருகிறார்.