டெல்லியில் சாலையோரம் சோலே குல்சா விற்கும் ஒரு வியாபாரியின் மாத வருமானம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, ஐடி ஊழியர்கள் மற்றும் கார்ப்பரேட் பணியாளர்களை அதிர வைத்துள்ளது. ஒரு தட்டு சோலே குல்சாவை வெறும் 40 ரூபாய்க்கு விற்கும் இந்த வியாபாரி, ஒரு நாளைக்குச் சராசரியாக 12,800 ரூபாய் வரை சம்பாதிக்கிறார்.
மூலப்பொருட்கள் மற்றும் வாடகை போன்ற செலவுகள் போக, இவருக்கு ஒரு நாளைக்குச் சுமார் 8,300 ரூபாய் லாபம் கிடைக்கிறது. இதைக் கணக்கிட்டுப் பார்த்தால், இவரது மாத வருமானம் சுமார் 2.50 லட்சம் ரூபாய் என்றும், ஆண்டு வருமானம் 30 லட்சம் ரூபாய் என்றும் தெரியவந்துள்ளது.
காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை உழைக்கும் இந்த வியாபாரி, தனது வெற்றியின் ரகசியமாகத் தூய்மை, தரமான பொருட்கள் மற்றும் மாறாத சுவை ஆகியவற்றைச் சொல்கிறார். இந்த வீடியோவைப் பார்த்த பல இளைஞர்கள், “இவ்வளவு படிச்சுட்டு மாசம் 30,000 சம்பளம் வாங்குற எனக்கு, இவரோட வருமானத்தைப் பார்த்தா அழுகையே வருது” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram
“>
இன்னும் சிலர் வேடிக்கையாக, “கார்ப்பரேட் வேலையை விட்டுவிட்டு ஒரு தள்ளுவண்டி கடையை ஆரம்பிக்கலாமா?” என்று விவாதித்து வருகின்றனர். ஒரு சாதாரண தெருவோர வியாபாரியின் வருமானம், ஒரு பெரிய ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் லாபத்திற்கு இணையாக இருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
