திருமண விழாக்களில் நண்பர்களின் கேலி கிண்டல்களையும், உறவினர்களின் சண்டைகளையும் நாம் பார்த்திருப்போம். ஆனால், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், மணமக்களே மேடையில் ஒருவருக்கொருவர் மல்லுக்கட்டிய விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

மாலை மாற்றும் சடங்கிற்காக மணமக்களும் மேடையில் ஏறியபோது, திடீரென இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. முதலில் விளையாட்டாகத் தொடங்கிய இந்த மோதல், சில நொடிகளிலேயே கைகலப்பாக மாறியது.

மணமகனும் மணமகளும் கோபத்தில் ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு சண்டையிட்டது அங்கிருந்த விருந்தினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேடையில் இருந்த உறவினர்கள் இருவரையும் சமாதானப்படுத்த முயன்றும், மணமக்கள் யாருடைய பேச்சையும் கேட்பதாக இல்லை.

“>

 

இந்த மோதல் வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் தங்களது பாணியில் வேடிக்கையாகக் கமெண்ட் செய்து வருகின்றனர்.

“இது கல்யாணம் மாதிரி தெரியல, WWE மல்யுத்தம் மாதிரி இருக்கு” என்றும், “திருமணத்திற்கு முன்பே எல்லா கணக்குகளையும் தீர்த்துவிட்டார்கள் போல” என்றும் கிண்டலாகப் பதிவிட்டு வருகின்றனர்.