பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு வகுப்புகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். ஆனால், அவ்வாறு அனுப்பப்படும் இடங்களில் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பது பெரிய கேள்விகுறியாகவே உள்ளது.

தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ காண்போரின் நெஞ்சைப் பதறவைக்கிறது. அந்த வீடியோவில், யோகா பயிற்சியின் போது ஒரு மாணவி வலியால் துடிப்பதும், “ஐயா, ரொம்ப வலிக்குது, தயவுசெய்து விட்டுடுங்க” என்று கதறுவதும் கேட்கிறது.

ஆனால், அந்த யோகா ஆசிரியர் சிறிதும் மனிதாபிமானமின்றி யோகா என்ற பெயரில் அந்தப் பெண்ணைத் துன்புறுத்துவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை என்றாலும், இது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

யோகா பயிற்சியின் போது உடல் நெகிழ்வுத்தன்மைக்காக செய்யப்படும் இத்தகைய செயல்கள் அநாகரீகமானது என்றும், இது ஒரு வகை சுரண்டல் என்றும் நெட்டிசன்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

குறிப்பாக, பெண் குழந்தைகளுக்குப் பெண் ஆசிரியர்களே பயிற்சி அளிக்க வேண்டும் என்றும், தங்கள் குழந்தைகள் எங்கு செல்கிறார்கள், அங்கு என்ன நடக்கிறது என்பதில் பெற்றோர்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

“>

 

லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்ட இந்த வீடியோ, தற்போதைய கல்வி மற்றும் பயிற்சி மையங்களின் பாதுகாப்பு குறித்துப் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.