வீட்டின் முற்றத்தில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்த ஒரு நபரை பாம்பு தீண்டிய அதிர்ச்சிகரமான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த நபர் தனது வீட்டின் வெளிப்பகுதியில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, கருப்பு நிற பாம்பு ஒன்று அங்கு ஊர்ந்து வந்துள்ளது.
அப்போது அந்த நபரின் வளர்ப்பு நாய் பாம்பைக் கண்டு குரைக்கத் தொடங்கியுள்ளது. நாய் தன்னைத் தாக்க வருவதை உணர்ந்த பாம்பு, அங்கிருந்து தப்பிக்க வேகமாக நகர்ந்தபோது, எதிர்பாராதவிதமாக உறங்கிக் கொண்டிருந்த அந்த நபரின் மேல் ஏறியதுடன், அவரது கையில் கொடூரமாகக் கடித்தது.
பாம்பு கடித்த வலி தாங்காமல் அந்த நபர் திடுக்கிட்டு எழுந்த நிலையில், அந்தப் பாம்பு மீண்டும் ஒருமுறை அவரைத் தாக்கியது. இதனால் நிலைகுலைந்து போன அவர், அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து அஞ்சி ஓடும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.
— news for you (@newsforyou36351) May 11, 2026
“>
மிகவும் பயமுறுத்தும் வகையில் உள்ள இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், வீட்டின் வெளியே உறங்குபவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், அந்த நபரின் உயிரைக் காப்பாற்ற நாய் முயற்சி செய்த விதம் ஆச்சரியமாக இருப்பதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
