ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான விறுவிறுப்பான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்த முக்கியமான போட்டியில் நட்சத்திர வீரர் விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் ‘டக் அவுட்’ ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இது அவர் தொடர்ந்து டக் அவுட் ஆகும் இரண்டாவது போட்டியாகும்.

இருப்பினும், அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது டிரெஸ்ஸிங் ரூமில் கோலி பேசிய வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

அந்த வீடியோவில், “இன்றைய ஆட்டத்தில் ஏதாச்சும் ஒரு வேலையைச் செய்ய எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி ஆண்டி (பயிற்சியாளர் ஆண்டி பிளவர்)” என்று தன்னைத் தானே கிண்டல் செய்துகொண்டு கோலி பேசியது அங்கிருந்த வீரர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.

தனது மோசமான ஆட்டத்தையும் விளையாட்டுத் தனமாக எடுத்துக்கொண்டு, அணியின் வெற்றியை முதன்மையாகக் கருதும் கோலியின் இந்தத் மனப்பக்குவத்தை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.