ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் ராய்ப்பூரில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான த்ரில் வெற்றிக்குப் பிறகு, ஆர்சிபி வீரர் கிருணால் பாண்டியா பகிர்ந்த ஒரு புகைப்படம் ரசிகர்களை நிலைகுலைய வைத்துள்ளது.
அந்தப் போட்டியில் மும்பையை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்சிபி மாஸ் காட்டிய நிலையில், அந்த வெற்றிக்காக கிருணால் பாண்டியா எவ்வளவு வலியைச் சுமந்திருக்கிறார் என்பது இப்போதுதான் தெரியவந்துள்ளது.
கிருணால் பாண்டியா தனது சமூக வலைதளப் பக்கத்தில், ரத்தக் கட்டுடன் இருக்கும் தனது வயிற்றுப் பகுதியை புகைப்படமாகப் பகிர்ந்துள்ளார்.
அதோடு, “சில தழும்புகள் நாம் எதற்காகப் போராடினோம் என்பதற்கான ஆதாரங்கள்” என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். களத்தில் காயத்தையும் பொருட்படுத்தாமல் அவர் காட்டிய அந்தப் போராட்ட குணம் ஆர்சிபி ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது அந்த ‘வலி’ மிகுந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், கிருணால் பாண்டியாவின் அர்ப்பணிப்பிற்குப் பாராட்டுகள் குவிகின்றன.
