தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவரை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, புதிய முதல்வர் விஜயை உதயநிதி ஸ்டாலின் உற்சாகத்துடன் கட்டி அணைத்து வரவேற்றது அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தேர்தல் களத்தில் ஒருவருக்கு ஒருவர் மாற்றாகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தாலும், மக்கள் தீர்ப்பை மதித்து ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் இணக்கமாகச் செயல்பட வேண்டும் என்ற ஜனநாயகப் பண்பை இந்தச் சந்திப்பு உணர்த்தியுள்ளது.

சட்டப்பேரவையில் இனி முதலமைச்சர் விஜய்க்கும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கும் இடையிலான அரசியல் யுத்தம் எப்படி இருக்கும் என்று தமிழகமே ஆவலோடு காத்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்த ‘பாசப் பிணைப்பு’ வீடியோவும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.