தமிழக சட்டமன்றத்தின் முதல் நாள் கூட்டத்தொடர் முடிவடைந்ததும், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்திக்கச் சென்றார் முதல்வர் சி.ஜோசப் விஜய். சித்தரஞ்சன் சாலையில் உள்ள ஸ்டாலின் இல்லத்திற்குச் சென்ற முதல்வரை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாசலுக்கே வந்து இன்முகத்துடன் வரவேற்றார். அப்போது, முதல்வர் விஜய்க்குப் பொன்னாடை போர்த்தி, பூங்கொத்து கொடுத்து மு.க.ஸ்டாலின் அவர்கள் கௌரவித்தார்.
பதிலுக்கு முதல்வர் விஜய்யும், தான் கொண்டு வந்திருந்த மலர்க்கொத்தைக் கொடுத்து மு.க.ஸ்டாலினுக்குத் தனது மரியாதையைத் தெரிவித்தார். தேர்தல் களம் ஆக்ரோஷமாக இருந்தபோதிலும், ஆட்சிப் பொறுப்பேற்ற பின் ஒரு மூத்த தலைவரை நேரில் சந்தித்து முதல்வர் விஜய் வாழ்த்துப் பெற்றது அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பேசப்பட்டதாகத் தெரிகிறது. இந்தச் சந்திப்பின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி, “இதுதான் உண்மையான ஜனநாயகம்” எனப் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
