தமிழக அரசியலில் எப்போதுமே அதிரடி கருத்துகளைக் கூறும் நாஞ்சில் சம்பத், தற்போது அதிமுக-வின் எதிர்காலம் குறித்துப் பகீர் கிளப்பும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “அதிமுக ஏற்கனவே இரண்டாகப் பிரிந்துவிட்டது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி. வேலுமணி போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், சுமார் 36 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

​நாஞ்சில் சம்பத்தின் இந்த அறிக்கை அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பேசிய அவர், “எதிர்க்கட்சிகள் ஒருவேளை தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தாலும், இந்த 36 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் முதல்வர் விஜய் தனது பெரும்பான்மையை மிக எளிதாக நிரூபிப்பார்” என்று ஆருடம் கூறியுள்ளார். அதிமுக-வுக்குள் நிலவும் அதிகாரப் போட்டி மற்றும் உட்கட்சிப் பூசலைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு, தவெக தனது பலத்தை அதிகரித்துக் கொள்ளும் என்ற நாஞ்சில் சம்பத்தின் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.