சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. இதனால் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 1,12,800 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14,100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 15382 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,23,056 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு 5 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு கிராம் 285 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,85,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
