கனடாவின் சர்ரே-டெல்டா எல்லைப் பகுதியில் நடந்த ஒரு விசித்திரமான விபத்தில், மோட்டார் சைக்கிள் ஒன்று அந்தரத்தில் டிராஃபிக் சிக்னல் கம்பியில் தொங்கிய சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் சென்ற ஒரு பிஎம்டபிள்யூ காருடன் மோதிய வேகத்தில், அந்த மோட்டார் சைக்கிள் அப்படியே காற்றில் பறந்து சென்று சிக்னல் கம்பியின் உச்சியில் சிக்கிக்கொண்டது.
விபத்திற்குப் பின் அங்கு வந்த மக்கள், காரை மட்டும் பார்த்துவிட்டு மற்றொரு வாகனத்தைத் தேடியபோது, அது தலைக்கு மேலே கம்பியில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இந்த கோர விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன, ஆனால் அவர் உயிருக்கு ஆபத்தில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
NEW: Motorcycle ends up dangling from a traffic signal pole following a crash in Canada near the Surrey-Delta border.
The bike appeared to launch into the air at the light after colliding with the front end of a BMW in an intersection.
According to police, the rider… pic.twitter.com/xalFUvnK68
— Collin Rugg (@CollinRugg) May 10, 2026
“>
காரை ஓட்டி வந்தவருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. விபத்தைப் பார்த்தவர்கள், மோட்டார் சைக்கிள் எப்படி அவ்வளவு உயரத்திற்குச் சென்று சிக்கியது என்பது நம்பவே முடியாத அளவுக்கு “கிரேஸி”யாக இருந்ததாகத் தெரிவித்தனர்.
தற்போது இந்த விபத்து குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
