சமூக வலைதளங்களில் வெளியாகும் சில வீடியோக்கள் நம்மை ரசிக்க வைப்பதோடு, அதில் சம்பந்தப்பட்டவர்களின் உணர்வுகளையும் புரிய வைக்கும். அந்த வகையில், தற்போது எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், தந்தை ஒருவர் தனது பெண் குழந்தையைத் தூக்கிக்கொண்டு சாலையில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது அந்த வழியாகச் சென்ற ஒரு பெண் கையில் தின்பண்டங்களுடன் கடந்து போக, யாரும் எதிர்பார்க்காத வகையில் அந்தச் சுட்டிப் பெண் சட்டென கையை நீட்டி அந்தப் பெண்ணிடம் உணவு கேட்கிறாள்.

​அந்நிய நபர் ஒருவரிடம் குழந்தை இப்படி கேட்டதை சற்றும் எதிர்பார்க்காத அந்தத் தந்தை, ஒரு நிமிடம் அப்படியே உறைந்து போகிறார். “ஐயோ, நடுரோட்டில் இப்படி செய்துவிட்டாளே” என வெட்கித் தலைகுனிந்த அவர், கூச்சத்திலும் சங்கடத்திலும் என்ன செய்வதென்று தெரியாமல் நெளிகிறார். பிறகு அந்தப் பெண் அன்புடன் குழந்தைக்கு உணவைக் கொடுக்க, அதை வாங்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்புகிறார். தந்தையின் அந்தத் தர்மசங்கடமான ரியாக்‌ஷன் தான் இப்போது இணையத்தில் பலரையும் சிரிக்க வைத்து வைரலாகி வருகிறது.