தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்பு விழாவில், எதிர்பாராத பல சுவாரசியமான சம்பவங்கள் அரங்கேறின. குறிப்பாக, தவெக தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ-வாகவும், தமிழக முதல்வராகவும் பதவியேற்ற அந்தத் தருணத்தில், எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த உதயநிதி ஸ்டாலினின் முகபாவனைகள் கேமராக்களில் சிக்கின.

விஜய் மேடையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டிருந்தபோது, உதயநிதி மிகவும் சோகமான முகத்துடன், அவரை ஒருமுறை கூட நேராகப் பார்க்காமல் அமர்ந்திருந்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ​சமூக வலைதளங்களில் இந்த வீடியோ தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது. விஜய்யின் வருகையும், அவர் முதல்வராகப் பதவியேற்றதும் திமுக தரப்பில் ஒருவிதமான இறுக்கத்தை ஏற்படுத்தியுள்ளதோ என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.