தமிழக சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ-க்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்ட நிகழ்வு தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக, பண்ருட்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. மோகன் அவர்கள், மேடையில் உறுதிமொழி ஏற்கும்போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் புகைப்படத்தைப் பார்த்ததும் நிலைதடுமாறிப் போனார். தன் அரசியல் குருவாகவும், தாயாகவும் கருதிய தலைவரின் உருவப்படத்தைக் கண்டதும், அவரால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளது.
#WATCH | பேரவையில் உறுதி மொழி எடுக்கும்போது உடைந்து அழுத பண்ருட்டி அதிமுக எம்.எல்.ஏ. மோகன்.#SunNews | #TNAssembly | #ADMK pic.twitter.com/FIPkV1k1ht
— Sun News (@sunnewstamil) May 11, 2026
தன் கையில் இருந்த உறுதிமொழிப் பத்திரத்தை வாசிக்கத் தொடங்கியபோதே குரல் தழுதழுக்க, அடுத்த நொடியே அவர் மேடையிலேயே தேம்பித் தேம்பி அழத் தொடங்கினார். அங்கிருந்த சக உறுப்பினர்கள் அவரைத் தேற்ற முயன்ற போதிலும், ஜெயலலிதா அவர்களின் இழப்பை நினைத்து அவர் விம்மி அழுத காட்சி காண்போரின் கண்களையும் கசியச் செய்துள்ளது. இந்த உணர்ச்சிகரமான வீடியோ தற்போது எக்ஸ் (X) தளத்தில் தீயாய் பரவி வருவதுடன், “உண்மையான விசுவாசம் இதுதான்” என அதிமுக தொண்டர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
