மராத்தி இசை உலகில் மூலம் உலகப் புகழ் பெற்றவர் சஞ்சு ரத்தோடு. ஜல்காவ் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த இவருக்கு, இசையில் எந்தப் பின்னணியும் கிடையாது. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துக்கொண்டிருந்த இவர், மேடையில் ஏறவே பயப்படும் சுபாவம் கொண்டவர்.
ஆனால், இசையின் மீதான காதலால் தனது கல்லூரிப் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு, எதிர்காலம் குறித்த எந்தத் திட்டமும் இல்லாமல் மும்பைக்குப் பயணித்தார். ஆரம்பக் காலத்தில் ரயிலில் கதவோரம் அமர்ந்து பயணித்த அந்தச் சாதாரண இளைஞன், இன்று பல மில்லியன் பார்வைகளைப் பெறும் ஒரு சூப்பர் ஸ்டார் பாடகராக உயர்ந்துள்ளார்.
சமீபத்தில் தனது பழைய புகைப்படத்தைப் பகிர்ந்த சஞ்சு ரத்தோடு, “ரயில் பயணம் தான் என்னை வெற்றியின் நிலையத்திற்கு கொண்டு சேர்த்தது” என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். ஆரம்பக் காலத்தில் கால்கள் வலிக்க நடந்த போராட்டங்களே இன்று தன்னை ஓட வைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
“>
பாரம்பரிய மராத்தி பாடல்களுடன் பாப் மற்றும் ஆப்ரோ-பீட் இசையைக் கலந்து அவர் உருவாக்கிய புதிய பாணி, இன்று உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களைக் கவர்ந்துள்ளது. இவரது சமீபத்திய ‘லால் பாங்டி’ (Lal Bangadi) பாடலும் இணையத்தில் செம வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. இவரது இந்த வளர்ச்சி பல இளம் கலைஞர்களுக்குப் பெரிய உத்வேகமாக அமைந்துள்ளது.
