டெல்லியிலிருந்து கிரேட்டர் நொய்டாவுக்கு ரேபிடோ பைக்கில் பயணம் செய்த இளம் பெண் ஒருவருக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பெண் பகிர்ந்துள்ள தகவலின்படி, பயணத்தின் போதே அந்த டிரைவர் பாலியல் ரீதியான பாடல்களை ஒலிக்கச் செய்தும், முகம் சுளிக்கும் வகையில் தனிப்பட்ட கேள்விகளைக் கேட்டும் அத்துமீறியுள்ளார். பயணம் முடிந்த பிறகு அந்தப் பெண்ணின் எண்ணிற்குத் தொடர்ந்து அழைப்புகளை மேற்கொண்டு தொல்லை கொடுத்துள்ளார்.
அந்தப் பெண் அந்த எண்ணைத் தடுத்த பிறகும், வேறு வேறு எண்களில் இருந்து அழைத்து மிரட்டியதுடன், கழிவறையில் இருந்தபடி வீடியோ கால் செய்து அந்தப் பெண்ணை மனரீதியாகப் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து அந்தப் பெண் இன்ஸ்டாகிராமில் ஆதாரங்களுடன் பதிவிட, அது காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. இதைக் கவனித்த ரேபிடோ நிறுவனம், அந்தப் பெண்ணிடம் மன்னிப்பு கோரியதோடு, சம்பந்தப்பட்ட டிரைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளது.
பொதுவாக இதுபோன்ற செயலிகளில் எண்கள் மறைக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த டிரைவர் எப்படித் தொடர்ந்து தொடர்பு கொண்டார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்தச் சம்பவம் ஆன்லைன் டாக்ஸி மற்றும் பைக் சேவைகளைப் பயன்படுத்தும் பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.
View this post on Instagram
“>
நெட்டிசன்கள் பலரும் அந்தப் பெண்ணை உடனடியாகக் காவல்துறையில் புகார் அளிக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.
