வயதான முதியவர் ஒருவர் தனது சைக்கிள் ரிக்ஷாவில் நான்கு தெருநாய்களுடன் பயணம் செய்யும் நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரிடம் மிகக்குறைந்த அளவிலான உடைமைகளே இருந்தாலும், அந்த நாய்கள் மீது அவர் காட்டும் அன்பு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வீடியோவில், இரண்டு நாய்கள் ரிக்ஷாவிற்குள் மெத்தைகள் மற்றும் பைகளுக்கு நடுவே நிம்மதியாக அமர்ந்திருக்க, மற்ற இரண்டு நாய்கள் அவருக்குத் துணையாக ரிக்ஷாவிற்கு அருகிலேயே நடந்து செல்கின்றன. அந்த நாய்கள் மிகவும் அமைதியாகவும், அவர் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர்களாகவும் காணப்படுவது பார்ப்பவர் நெஞ்சை உருக்கும் வகையில் உள்ளது.
இந்த முதியவர் வீடற்றவராகத் தெரிந்தாலும், அவரிடம் இருக்கும் அந்தப் பெரிய மனது பல பணக்காரர்களிடம் கூட இல்லை என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். “உங்களிடம் குறைவாக இருக்கும்போதுதான் உங்களால் மற்றவர்களுக்கு அதிகமாகக் கொடுக்க முடியும்” என்று ஒரு பயனர் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
“>
வசதி வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் அந்த நாய்கள் ஆரோக்கியமாக இருப்பதைப் பார்த்து, அவர் அவற்றை எவ்வளவு நன்றாகப் பராமரிக்கிறார் என்பது புரிகிறது. மனிதநேயம் மற்றும் வாயில்லா ஜீவன்கள் மீதான கருணையை எடுத்துரைக்கும் இந்த வீடியோ, “அன்பு காட்ட செல்வம் தேவையில்லை, நல்ல உள்ளம் இருந்தால் போதும்” என்ற உண்மையை உலகுக்கு உணர்த்துகிறது.
