மதுரையை சேர்ந்த தொழிலாளியான கார்த்திகேயன் இவருடைய மகள் பிரசன்னாதேவி (18), தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 5-ந்தேதி தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவி, தான் தேர்வைச் சரியாக எழுதவில்லை எனத் தனது தோழியிடம் கூறி மனவருத்தத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரசன்னாதேவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய தாய் வனிதா, மகள் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.

ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.