அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அந்நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறையை குறைப்பதற்காக இந்தியா, சீனா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது அதிரடியாக வரி விதித்தார். இதற்காக 1977-ம் ஆண்டின் பொருளாதார அதிகாரச் சட்டத்தைப் பயன்படுத்திய அவர், அமெரிக்க உற்பத்தியை ஊக்குவிப்பதே தனது நோக்கம் என்று கூறிவந்தார்.

ஏற்கனவே இது தொடர்பான வழக்கில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் டிரம்பிற்கு எதிராகத் தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்தச் சூழலில், இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது டிரம்ப் புதிதாக விதித்த 10 சதவீத உலகளாவிய வரிகள் சட்டவிரோதமானவை என்று அமெரிக்க வர்த்தக நீதிமன்றம் தற்போது அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சீன அதிபர் ஜீ ஜின்பிங்குடன் வர்த்தகப் பேச்சுவார்த்தை நடத்தவிருந்த நிலையில், டிரம்பிற்கு இந்தத் தீர்ப்பு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து டிரம்ப் நிர்வாகம் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.