தமிழக அரசியல் களத்தில் ஒவ்வொரு மணிநேரமும் அதிரடியான மாற்றங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஏற்கனவே காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை உறுதி செய்துள்ள நிலையில், தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் (CPI) விஜய்க்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது.
தமிழகத்தில் ஒரு நிலையான ஆட்சியை அமைப்பதற்கும், தற்போதைய அரசியல் சூழலில் ஒரு மாற்றத்தை உருவாக்குவதற்கும் விஜய்யின் தலைமையிலான முயற்சிக்குத் துணை நிற்பதாக அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
பாஜகவின் நிலைப்பாடு மற்றும் திமுக-காங்கிரஸ் மோதலுக்கு இடையே, இடதுசாரிகளின் இந்த ஆதரவு விஜய்க்கு மிகப்பெரிய பலமாகப் பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் ஆட்சியமைக்கத் தேவையான எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கையில் விஜய் நெருங்கி வருவதால், தமிழக அரசியல் களம் இப்போது தவெக-வைச் சுற்றியே சுழலத் தொடங்கியுள்ளது.
