தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சி அமைப்பதில் நீடித்து வரும் இழுபறிக்கு மத்தியில், நடிகர் பிரகாஷ் ராஜ் தவெக தலைவர் விஜய்க்கு அதிரடியாக ஆதரவு தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சி அமைக்க விஜய்க்கு அழைப்பு விடுக்காமல் ஆளுநர் தாமதம் செய்வதை பிரகாஷ் ராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஆளுநரின் இந்தச் செயல் அரசியலமைப்புக்கு எதிரானது மற்றும் அருவருப்பானது; மக்கள் விஜய்க்கு வாக்களித்துத் தீர்ப்பு வழங்கிவிட்டனர், எனவே அவரை ஆட்சி அமைக்க அனுமதிக்க வேண்டும்” என்று ஆணித்தரமாகக் கூறியுள்ளார்.
Respect people’s Mandate and let Vijay claim his right to form the government #justasking pic.twitter.com/FieNhHygD6
— Prakash Raj (@prakashraaj) May 7, 2026
அரசியல் ரீதியாக விஜய்யுடன் தனக்குக் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் மக்களின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
118 இடங்கள் என்ற பெரும்பான்மைக்கு இன்னும் சில இடங்களே குறைவாக உள்ள நிலையில், விஜய்யிடம் போதிய ஆதரவு கடிதங்கள் இருந்தும் ஆளுநர் பிடிவாதம் காட்டுவது ஜனநாயகப் படுகொலை என்று பிரகாஷ் ராஜ் கொதிப்படைந்துள்ளார். இவரது இந்தப் பதிவு தற்போதைய அரசியல் குழப்பத்திற்கு மத்தியில் தவெக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
