மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் பகுதியில் உள்ள சைதன்யா மகாகாளி கோவிலில், அதிகாரத் திமிரால் அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான தாக்குதல் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்பாதாஸ் தவானே என்ற போக்குவரத்துப் பிரிவு காவலர், தனது குடும்பத்துடன் கோவிலுக்குச் சென்றபோது, காலில் சாக்ஸ் அணிந்தபடி உள்ளே நுழைய முயன்றுள்ளார்.
கோவிலின் புனிதத்தைக் கருதி, அங்கிருந்த சங்கர்ஷ்நாத் என்ற பூசாரி, சாக்ஸைக் கழற்றிவிட்டு உள்ளே செல்லுமாறு பணிவாகக் கேட்டுள்ளார்.
#CaughtOnCam: Chhatrapati Sambhajinagar Cop Hits Priest After Being Asked To Remove Socks Before Entering Temple
Read story: https://t.co/hAlWW0MfRx #Maharashtra pic.twitter.com/xptq9LUj7f
— Free Press Journal (@fpjindia) May 7, 2026
இதில் ஆத்திரமடைந்த அந்த போலீஸ்காரர், பூசாரியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவரது தலைமுடியைப் பிடித்து இழுத்து மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.
இந்தத் தாக்குதலின் போது பூசாரியின் குடும்பத்தினரையும் அவர் ஆபாசமாகத் திட்டியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தர்மடிச் சம்பவம் அங்கிருந்த கேமராவில் பதிவாகி இணையத்தில் வைரலான நிலையில், “சட்டம் காக்க வேண்டியவரே இப்படி அராஜகத்தில் ஈடுபடலாமா?” எனப் பொதுமக்கள் கொதிப்படைந்துள்ளனர்.
இதுகுறித்து பூசாரி புகார் அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் ஆன்மீகவாதிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
