சமூக வலைதளங்களில் அவ்வப்போது சில வீடியோக்கள் நம் இதயத்தை கனக்கச் செய்யும், அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் ஒரு வீடியோ ஒட்டுமொத்த இணையதளவாசிகளையும் கண்கலங்க வைத்துள்ளது.
பொதுவாக திருமணங்கள் என்றாலே ஆடல், பாடல், கொண்டாட்டம் என களைகட்டும். ஆனால், அந்த மின்னொளி வெளிச்சங்களுக்கு பின்னால் இருக்கும் ஒரு கசப்பான உண்மையை இந்த வீடியோ தோலுரித்துக் காட்டியுள்ளது.
View this post on Instagram
வைரல் வீடியோவில், தள்ளாடும் வயதில், கைகள் நடுங்க நடுங்க ஒரு முதியவர் திருமண ஊர்வலத்தில் பாரமான குடையைத் தாங்கிப் பிடித்து நின்று கொண்டிருக்கிறார். ஓய்வெடுக்க வேண்டிய வயதில், ஒரு வேளை சோற்றுக்காக அவர் படும் இந்தத் துயரம் பார்ப்பவர் நெஞ்சை பிழிகிறது.
சுமார் 6 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ள இந்த வீடியோவில், அந்த முதியவரின் சோர்ந்த முகமும், வறுமையின் பிடியும் அப்பட்டமாகத் தெரிகிறது.
இதைப் பார்த்த நெட்டிசன்கள், “தன் தந்தையை இந்த வயதில் வேலைக்கு அனுப்பிய மகனுக்குக் கடவுள் தண்டனை கொடுப்பார்” என்றும், “வறுமை எவ்வளவு கொடுமையானது என்பதற்கு இந்த முதியவரே சாட்சி” என்றும் ஆவேசமாகவும் உருக்கமாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர். நம்மைச் சுற்றியுள்ள வறுமையின் கோர முகத்தை இந்த ஒரு வீடியோ உலகிற்கு உணர்த்தியுள்ளது.
