தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதைத் தடுக்கும் நோக்குடன் பாஜக செயல்பட்டு வருவதாகவும், அதற்கு ஆளுநர் துணை போவதாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். ஆளுநரின் இந்த ஒருதலைப்பட்சமான போக்கைக் கண்டித்து, நாளை தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் காங்கிரஸ் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அவர் அதிரடியாக அறிவித்துள்ளார்.
மக்களின் தீர்ப்பை மதிக்காமல் பாஜக அரசியல் சதுரங்கம் ஆடுவதைத் தடுத்து நிறுத்துவோம் என அவர் எச்சரித்துள்ளார். விஜய்யின் தவெக ஆட்சி அமையக் காங்கிரஸ் நேரடியாகக் களத்தில் இறங்கிப் போராட முன்வந்துள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், பாஜக – காங்கிரஸ் இடையேயான மோதலை உச்சகட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
