தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் கடந்த சில நாட்களாகவே அனல் பறந்து வந்த நிலையில், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி சி. மயில்வாகனன் ரவி வெளியிட்ட எக்சிட் போல் முடிவுகள் இணையத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன.
சுமார் 2 லட்சத்து 34 ஆயிரம் மக்களிடம் கருத்து கேட்டு, 2,340 அதிகாரிகளின் கள ஆய்வின் அடிப்படையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 121 இடங்களைப்பிடித்து ஆட்சியைப் பிடிக்கும் என அவர் அதிரடியாகத் தெரிவித்திருந்தார்.
தனது Exit Poll போஸ்ட்டை ஆதரித்த அனைவருக்கும் நன்றி கூறிய ஐபிஎஸ் ரவி💥 pic.twitter.com/QXSLFoHMqM
— priya (@PriyankaSmile01) May 6, 2026
இவரது இந்த துணிச்சலான கணிப்பிற்கு சமூக வலைதளங்களில் ஆதரவும் பாராட்டுகளும் குவிந்த நிலையில், தனது கருத்தைப் பார்த்த கோடிக்கணக்கான மக்களுக்கும், ஆக்கப்பூர்வமான விவாதங்களை முன்னெடுத்தவர்களுக்கும் ஐபிஎஸ் ரவி தற்போது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இவரது இந்த எக்சிட் போல் பதிவு, தேர்தல் முடிவுகளுக்கு முன்பே தவெக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
