உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முதலாம் வகுப்பு மாணவன் ஒருவன், தனது பகுதியில் குண்டும் குழியுமாக இருந்த சாலையைச் சரிசெய்யக் கோரி சமூக வலைதளத்தில் விடுத்த வேண்டுகோள் பெரும் வைரலானது. “மாவட்ட ஆட்சியர் மாமா, தயவுசெய்து எங்கள் சாலையைச் சரிசெய்யுங்கள்” என்று அந்தச் சிறுவன் உருக்கமாகப் பேசிய வீடியோ அதிகாரிகளின் கவனத்திற்குச் சென்றது.
மேலும் சிறுவனின் இந்த மழலை மாறாத கோரிக்கையைக் கண்ட மாவட்ட நிர்வாகம் உடனடியாகச் செயல்பட்டு, அந்தச் சாலையைச் சீரமைக்கும் பணிகளைத் தொடங்கியது. சமூக வலைதளங்களின் வலிமையையும், ஒரு சிறுவனின் நேர்மையான வேண்டுகோள் அதிகார மட்டத்தில் எந்தளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.
Hello @DMKheri,
Kindly listen to this innocent child’s request and construct a proper road for her!
Also, kindly ensure such roads never become a roadblock for children who want to study, or for commuters who want to travel from one place to another.pic.twitter.com/84RUZcDD0C
— #YeThikKarkeDikhao (@YTKDIndia) May 5, 2026
“>
இந்நிலையில் வெறும் புகாராக மட்டும் பார்க்காமல், அந்தச் சிறுவனின் ஆதங்கத்தைப் புரிந்து கொண்டு விரைந்து நடவடிக்கை எடுத்த உத்தரப் பிரதேச அதிகாரிகளுக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தற்போது அந்தச் சாலை புதுப்பிக்கப்பட்டு வருவதால், அப்பகுதி மக்களும் அந்தச் சிறுவனும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
