நடிகர் விஜய் தனது 50 வயதிலும் குறையாத இளமையுடனும், மின்னல் வேக சுறுசுறுப்புடனும் இருப்பதற்கு அவர் கடைபிடிக்கும் முறையான உணவுப் பழக்கமும், எளிமையான உடற்பயிற்சிகளுமே முக்கியக் காரணங்களாகும்.

ஜிம்மில் அதிக பளு தூக்குவதை விட, தினமும் காலையில் 10 முதல் 40 நிமிடங்கள் வரை விறுவிறுப்பான நடைப்பயிற்சி  போன்ற கார்டியோ பயிற்சிகளுக்கே அவர் முன்னுரிமை அளிக்கிறார். உணவைப் பொறுத்தவரை, தனக்குப் பிடித்த உணவுகளைச் சாப்பிட்டாலும் அவற்றை மிகக் குறைந்த அளவிலேயே எடுத்துக்கொள்கிறார்.

குறிப்பாக ஜங்க் ஃபுட் மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்த்து, மதிய உணவில் அதிக புரதம் நிறைந்த காய்கறிகளையும், இரவு 7 மணிக்கே மிக இலகுவான உணவையும் உட்கொள்வதை அவர் வழக்கமாக வைத்துள்ளார்.

விஜய்யின் உடலை எப்போதும் ‘ஃபிளெக்ஸிபிள்’ ஆக வைத்திருப்பதில் அவருடைய கடினமான நடனப் பயிற்சிகளுக்குப் பெரும் பங்குண்டு. ஒரு பாடலுக்கான ரிகர்சல் செய்யும்போதே அதிகப்படியான கலோரிகளை எரித்து விடுவதால், அவரது ஸ்டாமினா குறையாமல் இருக்கிறது.

உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி, போதுமான உறக்கம் மற்றும் மன அமைதியும் தனது இளமையைத் தக்கவைக்க அவசியம் என அவர் கருதுகிறார். “கட்டுக்கோப்பான உடல் என்பது ஒரே நாளில் வராது; பொறுமையும், தொடர்ச்சியான பயிற்சியும் இருந்தால் 50 வயதிலும் எனர்ஜியாக இருக்கலாம்” என்பதே அவர் தனது ரசிகர்களுக்குச் சொல்லும் ரகசியமாகும்.