“தோற்றத்தை வைத்தும், சூழ்நிலையை வைத்தும் ஒருவரை ஒருபோதும் குறைத்து மதிப்பிடக் கூடாது” என்ற பழமொழியை நாம் கேட்டிருப்போம். ஆனால், அதனை உணர்த்தும் விதமாக காட்டில் நடந்த ஒரு திகைப்பூட்டும் வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. காட்டில் இரை தேடிச் சுற்றிய ஒரு கழுதைப்புலி (Hyena), அங்கே மெதுவாகச் சென்று கொண்டிருந்த ஓர் ஆமையைப் பார்க்கிறது. ஆமைதானே, மெதுவாகத்தானே இருக்கும்.. எளிதில் வேட்டையாடி விடலாம் என எண்ணிய கழுதைப்புலி, அதனைத் தாக்கி உண்ண முயற்சி செய்கிறது.
பொதுவாகக் கழுதைப்புலிகள் மிகக் கொடூரமான வேட்டைக்கார விலங்குகள். ஆனால், இந்த முறை அதன் கணக்கு தப்பியது. ஆமையைக் கடிக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக கழுதைப்புலியின் நாக்கு ஆமையின் வாய்க்கு அருகே சென்றது. அவ்வளவுதான்! மின்னல் வேகத்தில் செயல்பட்ட ஆமை, கழுதைப்புலியின் நாக்கை இறுகக் கவ்விக்கொண்டது.
View this post on Instagram
வலி தாங்க முடியாமல் கழுதைப்புலி அலறியது. ஆமையின் பிடியில் இருந்து விடுபட தரையில் விழுந்து புரண்டது. ஆனாலும் அந்தச் சிறிய ஆமை தனது பிடியை விடவில்லை. ஒரு கட்டத்தில் வேட்டையாட வந்த விலங்கு, உயிருக்குப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இறுதியில் பெரும் போராட்டத்திற்குப் பின்பே கழுதைப்புலி அங்கிருந்து தப்பி ஓடியது.
இந்த வீடியோ வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, வாழ்வின் மிக முக்கிய பாடத்தையும் உணர்த்துகிறது. அமைதியாகத் தெரிபவர்கள் பலவீனமானவர்கள் அல்ல; அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது அல்லது அவர்கள் எதிர் தாக்குதல் நடத்தும்போது யாராலும் தடுக்க முடியாது என்பதே உண்மை. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ, லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து வைரலாகி வருகிறது. மேலும் “காடு கற்றுக்கொடுத்த மிகச்சிறந்த பாடம் இது” என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
